அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவலருக்கு நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement
 காவலருக்கு நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு

சென்னை : வெளி மாநில தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த காவலர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு, நிவாரண நிதி வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில், வெளி மாநிலத்தவர், ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, படிப்படியாக அனுப்பி வைக்க, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில் இருந்து, 13 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில், கடந்த, 9ல், வெளி மாநில ஒப்பந்த தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என, கோஷமிட்டனர்.

அவர்களிடம், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறி, கலைந்து செல்லும்படி, காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.ஆனால், சில தொழிலாளர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினருடன், தகராறில் ஈடுபட்டனர். இதில், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா, காவலர் சக்திவேல் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த காவலருக்கு, 2 லட்சம்ரூபாய்; லேசான காயமடைந்த இன்ஸ்பெக்டருக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X