சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பத்திரிகையாளர் சந்திப்பால் இயக்குனர் ஆனேன்!

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பத்திரிகையாளர் சந்திப்பால்  இயக்குனர் ஆனேன்!

பத்திரிகையாளர் சந்திப்பால் இயக்குனர் ஆனேன்!

இயக்குனர் ஆனது எப்படி என, டி.பி.கஜேந்திரன்: தில்லுமுல்லு படத்துக்காக, இயக்குனர் பாலசந்தர் கிட்ட நான் உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் படத்தில், இயக்குனர் விசுவும், வேலை பார்த்திட்டிருந்தார். நான் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள்ல இருந்தே, விசுவுடன் நல்லா பழக ஆரம்பிச்சேன். தில்லு முல்லு படம் முடிஞ்சதுக்கு அப்புறமும், பாலசந்தர் சார் கிட்ட வொர்க் பண்ணிட்டிருந்தேன். விசு சார், அவரோட முதல் படத்தை இயக்கும்போது, என்னை உதவி இயக்குனராக இருக்க கேட்டார். நானும் அவரோட முதல் படத்திலிருந்து, 10 படங்களுக்கு உதவி இயக்குனராக வேலை பார்த்தேன். விசு கிட்ட உதவி இயக்குனராக இருந்தப்ப, தனியா ஒரு படம் பண்ணணும்னு எனக்குத் தோணவே இல்லை. ஏன்னா, விசு படங்கள்ல வேலை பார்க்கும் போது, அவர் கொடுக்கிற சுதந்திரம், மரியாதையை பார்க்கும் போது, இங்கேயே இருந்திடலாம்னு தோணும். அதனால், அவருடன் ரொம்ப வருஷம் இருந்துட்டேன். ஒரு நாள், விசு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த, பிரஸ் மீட்டில், ஒரு பத்திரிகையாளர், 'பாலசந்தர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள், இப்ப இயக்குனர்களாகி விட்டனர். ஆனா, உங்க உதவி இயக்குனர்கள் யாருமே, இதுவரைக்கும் இயக்குனர் ஆகலையே...அது ஏன்'னு கேட்டார். அப்போது விசு, 'என்கிட்ட இருக்கிற உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படம் பண்ணும் முயற்சியில் இருக்கிறாங்க. அதில் முதல் ஆளா, கஜேந்திரன் இருக்கிறார். சீக்கிரமே அவர் இயக்குனர் ஆவார்'னு சொல்லிட்டார்; எனக்கு, 'செம ஷாக்!' ஏன்னா, எனக்கு இயக்குனர் ஆகணும்னு ஐடியாவே இல்லை. அடுத்த நாளே, விசு சார் என்னை அழைச்சு, 'நீ இனிமேல் வேலைக்கு வர வேணாம். நல்ல கதை ஒண்ணு எழுதிட்டு வந்து, என்னை பார்'னு சொல்லிட்டார். அதே சமயத்தில், தயாரிப்பாளர் ராம நாராயணன், 'விசுவோட கால்ஷீட் வாங்கிட்டு வந்தா, நானே உன் படத்தை தயாரிக்கிறேன்'னு சொன்னார். அதுக்கப்புறம் விசுவுக்கான கதையை எழுதுற வேலைகள்ல இறங்க ஆரம்பிச்சேன். அப்போ, ஒரு நாள், ஒரு நாடகம் பார்க்கப் போனேன். அந்த நாடகத்தின் கதை, எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அவங்க கிட்ட பேசி, அந்தக் கதையை மட்டும் வாங்கிட்டு, அதுக்கான திரைக்கதையை நானே எழுதி, விசு கிட்ட சொன்னேன்; அவருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. 'இந்தக் கதையில நீங்க தான் நடிக்கணும்; இது, உங்களுக்குத் தான் செட்டாகும்'னு சொன்னேன். 'இது பெரிய கேரக்டரா இருக்குடா. அதிக நாள் நடிக்கணுமே'ன்னு முதல்ல யோசிச்சார். அப்புறம், 'சரி, நானே நடிக்கிறேன்'னு சொல்லிட்டார். இப்படித் தான், வீடு மனைவி மக்கள் படத்தில் அவரை நடிக்க வெச்சேன்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-மே-202005:02:06 IST Report Abuse
J.V. Iyer திறமை எங்கிருந்தாலும் தக்க சமயத்தில் வெளியே வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X