பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவி வழங்கல்

Added : மே 12, 2020
Share
Advertisement

திண்டிவனம்: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஏற்பாட்டின் பேரில், செவிலியர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் நகராட்சி 8 வது வார்டு சார்பில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலலர், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் சண்முகம், அரசு மருத்துவமனை 50க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ், பொறியாளர் பவுல் செல்வம், அரசு தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, நகர அ.தி.மு.க., செயலர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முகமது ெஷரீப், நகர அவைத்தலைவர் மணிமாறன், எம்.ஜி.ஆர்.மன்றம் சுரேஷ், ரவி, எல்.ஐ.சி., ரவி, நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சக்கரவர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் குமார், வெற்றிவேல், வேணுகோபால், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் செல்வம், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர் சங்கர், தொழிற்சங்கம் குப்புசாமி, ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் திருமகள், சேட்டு, நரேந்திரன், கற்பகம், பிரகாஷ், கிளை நிர்வாகிகள் பன்னீர்செல்வம், கோகுல், அரிகிருஷ்ணன், ரவி, சுரேஷ், ஈஸ்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X