சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு:ஊட்டியில் ஐந்து பேக்கரிகளுக்கு 'சீல்'

Added : மே 12, 2020
Share
Advertisement
 உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு:ஊட்டியில் ஐந்து பேக்கரிகளுக்கு 'சீல்'

ஊட்டி;ஊட்டி நகரில் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட திடீர் ஆய்வில், 5 பேக்கரிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.ஊட்டி நகரில் ஏராளமான பேக்கரிகள், மளிகைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் சில தளர்வுகளால் நேற்று முன்தினம் முதல் நகரில் அனைத்து வகையான கடைகள் திறக்கப்பட்டது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், நீலகிரி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர், நகரில் உள்ள பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.இதில், பொட்டல படுத்துதல் விதிகள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகிய விபரங்கள் இல்லாத கடைகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளை பின்பற்றாத, 5 பேக்கரிகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் கூறுகையில்,''பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் பொட்டலப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்பு உரிமை ஆகியன கட்டாயம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். திடீர் ஆய்வு மூலம் மேற்கண்ட விதிகளை கடைபிடிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X