பொது செய்தி

தமிழ்நாடு

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு ரயில்

Updated : மே 12, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு ரயில்

திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கினால் பிழைக்க வழி இல்லாமலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் தெற்கு ரயில்வேயும் இணைந்து திருநெல்வேலியிலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள பேட்டியா என்ற ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்து உள்ளது.


latest tamil news


இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை (12.5.2020) இரவு 10 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை (15.5.2020) அதிகாலை 05.30 மணிக்கு பேட்டியா ரயில்நிலையம் சென்று சேருகிறது. இந்த ரயிலில் 1332 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பயணிக்கிறார்கள்.

அனைத்து ரயில் பெட்டிகளும் கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாக முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர் ரயிலில் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். சிறப்பு ரயிலில் பயணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகாணி, திரு பிரசன்னா, ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-மே-202006:39:32 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் நாட்டின் பொருளாதார சக்கரத்தின் அச்சாணி. வளர்ச்சியின் முதுகெலும்புகள். நடுத்தெருவில் நாயா அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-202001:34:25 IST Report Abuse
தமிழ்வேல் இப்போ போயி 18 ந்தேதி திரும்ப வரணுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X