பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் செல்வதில் தாமதம்: கலெக்டரை சந்தித்து கோரிக்கை

Added : மே 12, 2020
Share
Advertisement
 சொந்த ஊர் செல்வதில் தாமதம்: கலெக்டரை சந்தித்து கோரிக்கை

ஊட்டி:வடமாநில தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து, பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.நீலகிரியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை வாய்ப்புகளை இழந்த வட மாநில தொழிலாளர்களுக்கு, தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. சில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதன்படி, 2,000 பேர் சொந்த ஊர் செல்ல அந்தந்த தாலுகா பகுதியில் விருப்ப மனு அளித்துள்ளனர். வருவாய்த்துறையினர் சேகரித்து மாவட்ட நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். இரண்டு வாரங்கள் கடந்தும், வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு அனுப்பப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வது குறித்து கோரிக்கை வைத்தனர்.வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும், 2,000 விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதில், இதுவரை, 11 பேர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்களின் இ--பாஸ் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சொந்த ஊர் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X