ஊரடங்கு தளர்வு குருட்டுத்தனமாக அறிவிக்கப்படுகிறது ; உலக சுகாதார நிறுவன அதிகாரி எச்சரிக்கை

Added : மே 12, 2020
Share
Advertisement

நியூயார்க் : 'பொருளாதார சரிவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக, சில நாடுகள், கண் மூடி, குருட்டுத்தனமாக ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கின்றன.

'பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை, முறையாக அடையாளம் காணவில்லை என்றால், கொரோனா அலை, மீண்டும் வீச வாய்ப்புள்ளது' என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.'கொரோனா வைரஸ் பரவலுக்கு, உலகம் முழுதும், 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்' என, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம், தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை, இதைவிட அதிகமாக இருக்கும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனி, 8.3 கோடி மக்கள் தொகை கொண்டது.

இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டு உள்ளனர்.பிரிட்டனில், மார்ச் மாதத்தில், தொற்று பரவத் துவங்கிய போது, தொடர்பை கண்டறிவதில், அந்நாட்டு அரசு, அலட்சியம் காட்டியது. தொற்று முழு வேகத்தில் பரவத் துவங்கியதும், இந்த பணி, சவால் நிறைந்ததாக மாறியது. தற்போது, தொடர்பை கண்டறியும் பணியில், 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரான்ஸ், வாரத்துக்கு, ஏழு லட்சம் பரிசோதனைகள் நடத்த, உறுதி ஏற்றுள்ளது.

நிலைமை இப்படி இருக்க, சில நாடுகள், முழு அடைப்பு உத்தரவுகளை தளர்த்தி, இயல்பு நிலைக்கு திரும்ப முடிவுசெய்துள்ளன. இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின், அவசர சிகிச்சைகள் துறை தலைவர், டாக்டர் மைக்கேல் ரெயான், கூறியதாவது:ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில், தொற்று பாதிப்பு தொடர்புகளை கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிறப்பாக இருந்தன.எனவே தான், அங்கு பாதிப்புகள் கைமீறி போவதற்கு முன், நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால், மற்ற நாடுகளில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், சரியாக செய்யப்படவில்லை. இதனால், கொரோனா அலை, மீண்டும் வீச வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, குருட்டுத்தனமாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது, ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X