பொது செய்தி

தமிழ்நாடு

53 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு துவங்கியதில் இருந்து இதுவரை, உழவர் சந்தைகள் வாயிலாக, 53 ஆயிரம் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை : விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் போன்ற விளை பொருட்களை, நேரடியாக கொள்முதல் செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர், ஜி.ராஜேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதிகள், வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

வேளாண் துறை துணைச் செயலர், ரவிகுமார் சார்பில், அரசு பிளீடர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்த மனு: ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள், பழங்கள் கொள்முதல் செய்ய, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் வாயிலாக, 6,000 டன் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகின்றன.சென்னை, கோயம்பேடு சந்தை மூடப்பட்ட உடன், 500 டன் காய்கறிகள், பழங்களை தினசரி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலுவை ஏதும் இல்லைதமிழகத்தில் நடக்கும் கொள்முதல், விற்பனையை, மத்திய அரசு முன் மாதிரியாக எடுத்து, மற்ற மாநிலங்களுக்கும் இதை தெரிவிக்க உள்ளது.வெளி மாநிலங்களுக்கு, விளை பொருட்களை எடுத்து செல்லவும், தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஊரடங்கு காலத்தில், 63 ஆயிரம் டன் வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு, அரசு வழி வகுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததில், 522 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

நேரடி கொள்முதல் மையங்கள் வாயிலாக, 22.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ததில், 4,236 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிலுவை ஏதும் இல்லை.ஊரடங்கு துவங்கியது முதல் இதுவரை, உழவர் சந்தைகள் வாயிலாக, 53 ஆயிரம் டன் காய்கறி, பழங்கள் விற்பனை ஆகியுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுகள், யூகத்தின் அடிப்படையிலானது. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசின் பதில் மனுவில் திருப்தி தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை, வரும், 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X