சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல்: 10 பேர் கைது

Added : மே 12, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் கண்ணன், 36; வி.சி., கட்சி ஒன்றிய செயலர். இவர், நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார், 24;தனது நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக் பார்த்து சிரித்தார்.இதை பார்த்த கண்ணன் தன்னைப் பார்த்து தான் அவர் சிரிப்பதாக நினைத்து செல்வகுமாரிடம் தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு பிரிவனர்களாக தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, இரு தரப்பைச் சேர்ந்த செல்வகுமார், 24; சிவராஜ், 39; ரமேஷ், 37; பிரசாந்த், 25; திருப்பதி, 21; ராஜதுரை, 25; சின்னதுரை, 25; மெல்லரசு, 20; கவுதம், 20; ராஜ் குமார், 26; ஆகிய 10 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X