பொது செய்தி

தமிழ்நாடு

பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

Added : மே 12, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 17ம் தேதிக்கு பின், பியூட்டி பார்லர்களை திறப்பதற்கு அனுமதி வழங்ககோரி கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இது குறித்து அனைத்திந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கொளஞ்சி கிருஷ்ணா தலைமையில் அளித்த மனு:தமிழகத்தில் தற்போது 34 வகையான கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 175க்கும் மேற்பட்ட சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை (பியூட்டி பார்லர்) கடைகள் உள்ளது. இதனை நம்பி பல்வேறு குடும்பங்கள் உள்ளன.கொரோனா ஊரடங்கு உத்தரவால் பியூட்டி பார்லர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். பியூட்டி பார்லர்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அரசின் உத்தரவுகளை கடைபிடித்து, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துக்கிறோம். எனவே, வரும் 18 ம் தேதி முதல் பியூட்டி பார்லர்களை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X