பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருட்கள் மீது கடன் பெற்று தருகிறது உணவு துறை

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் குடோன்களில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்தால், அவற்றின் மீது, வங்கிகளில் கடன் பெற்றுத் தரும் பணியை, உணவு துறை செய்து வருகிறது.

தமிழக உணவு துறையின் கீழ், சேமிப்பு கிடங்கு நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்திற்கு, தமிழகம் முழுதும், 60 இடங்களில், 7.60 லட்சம் டன் கொள்ளளவில், 270 குடோன்கள் உள்ளன. அவற்றை, விவசாயிகளும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், பாட நுால் கழகம், 'டாஸ்மாக்' உள்ளிட்ட நிறுவனங்களும், வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றன.வைரஸ் பாதிப்பால், உணவு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை, சந்தைக்கு அனுப்ப முடியாமலும், பாதுகாக்க முடியாமலும், பல விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சேமிப்பு கிடங்கு நிறுவன குடோன்களில் வைக்கப்படும் பொருட்களின் விபரங்கள், மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதை, வங்கிகளில் வழங்கி, அடமான கடன் பெறும் வசதி உள்ளது. இது, பலருக்கு தெரியவில்லை.தற்போது, குடோன்களில், 1 லட்சம் டன் கொள்ளளவு உடைய, இட வசதி காலியாக உள்ளது. எனவே, ஊரடங்கால், விளைபொருட்களை பாதுகாக்க முடியாமல் சிரமப்படும் விவசாயிகள், அந்த குடோன்களில், தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்கலாம்.

அந்த பொருட்களின் மீது, அவர்களுக்கு, வங்கிகளில் கடன் பெற்று தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சென்னை, கிண்டியில் உள்ள, சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டால், கூடுதல் விபரங்களை வழங்குவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
13-மே-202013:42:14 IST Report Abuse
VTR இது, பலருக்கு தெரியவில்லை. Awareness to be d by the concerned department. At this juncture, this initiative would facilitate better working capital for the concerned traders. The welfare initiative's existence is not important. Ensuring that the same is utilised by the needy is what
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X