சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் சம்பளத்தில் கையாடல் அலுவலக எழுத்தர், 'சஸ்பெண்ட்'

Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : கும்பகோணத்தில், அர்ச்சகர்கள் சம்பள பணம், 5 லட்சம் ரூபாயை கையாடல் செய்த, உதவி கமிஷனர் அலுவலக எழுத்தர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

அறநிலைய துறையில், கோவில் அர்ச்சகர்களுக்கான சம்பளம், காசோலையாக, அந்தந்த உதவி கமிஷனர்கள் வழியாக வழங்கப்படுகிறது. தஞ்சை அறநிலைய துறை மாவட்டத்தில், கும்பகோணம் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள, கோவில் அர்ச்சகர்களுக்கு, சில நாட்களுக்கு முன், சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.ஆனால், காசோலையை, அர்ச்சகர்கள் வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது.

இத்தகவல் அறிந்து, உதவி கமிஷனர் அதிர்ச்சி அடைந்தார். வங்கி கணக்கை பரிசோதித்த போது, அதில், போலி கையெழுத்து போட்டு, 5 லட்சம் ரூபாயை, அலுவலக எழுத்தர் நரசிங்கன்என்பவர், கையாடல் செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, தஞ்சை இணை கமிஷனர் உத்தரவின் படி, நரசிங்கன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபோன்ற கையாடல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், அறநிலைய துறை அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு, 'ஆன்-லைன்' பரிவர்த்தனை வாயிலாக, அவரவர் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்த, அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
13-மே-202022:19:01 IST Report Abuse
m.viswanathan இட ஒதிக்கீட்டில் பணியில் சேர்ந்த அயோக்கியனாக இருப்பான் , இதற்கு தான் திராவிட இயக்கங்கள் போராடுகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X