பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாாரில் நகை ஜவுளிக் கடைகள் அடைப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் நகை, ஜவுளி கடைகளை போலீசார் மூடும்படி கூறியதால் பரபரப்பு நிலவியது.தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 10ம் தேதி வெளியானது. இதன் மூலம் பெரும்பாலான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதன் காரணமாக திருக்கோவிலுாரில் நேற்று முன்தினம் நகைக்கடை, ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.கடைகளின் உரிமையாளர்கள் 'ஏசி' வசதி இருந்தால் அதனை இயக்க வேண்டாம் என அறிவிப்பில் அறிவுறுத்தியதையடுத்து. அதன்படி 'ஏசி' வசதி உள்ள கடைகளில் மறு உத்தரவு வரும் வரை 'ஏசி' இயக்கப்படாது என்ற அறிவிப்பை ஒட்டியிருந்தனர். இந்நிலையில் நேற்று அனைவரும் வழக்கம் போல் கடையை திறந்தனர். ஆனால், போலீசார் ஜவுளி மற்றும் நகை கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர். அரசின் அறிவிப்பில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.திருக்கோவிலுார் பேரூராட்சி அந்தஸ்தில் வருவதால் ஜவுளி, நகைக் கடைகளை திறக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.இதனால் குழப்பம் ஏற்பட்டு நகரில் ஜவுளி, நகைக் கடை மட்டுமல்லாது பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. அரசின் உத்தரவை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதால்தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு வருவாய்த்துறை தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X