சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு, 8,718 ஆக உயர்வு

Added : மே 12, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, 8,718 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும், 53ல் இருந்து, 61 ஆக உயர்ந்துள்ளது.

குவைத் நாட்டில் இருந்து வந்த, நான்கு பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள், 52ல் இருந்து, 55 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளன. கொரோனா அறிகுறியுடன், 4,401 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து, 788 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 716 பேருக்கு, கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 510 பேர், அரியலுார் மாவட்டத்தில், 36 பேர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 35 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 27 பேர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். மேலும், குவைத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த, நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 2.56 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப் பட்டதில், 8,718 பேருக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 5,848 பேர் ஆண்கள்; 2,867 பேர் பெண்கள்; மூன்று பேர் திருநங்கையர்.சென்னையில் மட்டும், 4,882 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து, முதலிடத்தில் நீடிக்கிறது. 467 பேர் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது.சிகிச்சைக்கு பின், நேற்று, 83 பேர் வீடு திரும்பினர். இதுவரை மொத்தம், 2,134 பேர் குணமடைந்து, வீடு திரும்பிஉள்ளனர்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சென்னையை சேர்ந்த, 69 மற்றும், 63 வயது நபர்கள், நேற்று முன்தினம் உயிரிழந்தனர்; 55 வயது பெண், 10ம் தேதி உயிரிழந்துள்ளார்.இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, திருவள்ளூரை சேர்ந்த, 55 மற்றும் 43 வயது பெண்கள், நேற்று முன்தினம் உயிரிழந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சென்னையை சேர்ந்த, 75 வயது முதியவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்; நேற்று, 70 வயது முதியவர் மற்றும், 58 வயது பெண் இறந்தனர்.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், 57 வயது பெண், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.உயிரிழந்த அனைவருக்கும், உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகள் இருந்ததாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும், 39 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.பச்சை நிறத்தில் 3!பச்சை மண்டலத்தில் இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிவப்பு மண்டலமாக மாறிஉள்ளது. இதற்கிடையே, மூன்று மாவட்டங்கள், கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 70 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 69 பேர் குணமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 12 பேரும் குணமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட, 114 பேரும் குணமடைந்துள்ளனர். இந்த மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இதனால், இம்மாவட்டங்கள், பச்சை நிற மண்டலத்திற்கு மாறியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X