சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியைத் தாக்கிய இருவர் மீது வழக்கு

Added : மே 12, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; எடைக்கல் அருகே கணவன், மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.எடைக்கல் அருகே கூந்தலுார் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், கொரோனா தொடர்பாக ஊர் மக்களோடு சேர்ந்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக தெருக்களில் கட்டைகள் கட்டி அடைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுப்ரமணியனை தாக்கினர். தடுத்த அவரது மனைவி மகேஸ்வரியையும் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், எடைக்கல் போலீசார் கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X