இந்தியா

மூலிகைத் தோட்டம் அமைப்பு

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நைட்டிங்கேல் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது.செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், புதுவை அரசு செவிலியர் சங்கம் சார்பில், புதுச்சேரி அரசின் பல்வேறு மருத்துவமனைகளில் 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.மேலும், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நைட்டிங்கேல் மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டில் பணி நிறைவு பெற உள்ள தலைமை செவிலியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற செவிலியர்களின் பணியை போற்றும்விதமாக மரக் கன்றுகள் நடப்பட்டன.மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுஜாதா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி முரளி, மக்கள் தொடர்பு அதிகாரி ராஜாம்பாள் ஆகியோர் மரக்கன்றுகள், மூலிகைச் செடிகளை நட்டனர்.விழாவில் அரசு செவிலியர் சங்க தலைவர் பழனியம்மாள், பொருளாளர் ஸ்டெல்லா மேரி, துணைத் தலைவர் சாந்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை சங்க செயலர் துளசி பாக்கியவதி ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X