பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

Added : மே 12, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் ரோட்டரி சங்க தலைவர் ராஜா தலைமையில் வழங்கப்பட்டது. செயலாளர் ஜார்ஜ், நிர்வாகிகள் பத்மநாதன், பாண்டியன், பாலா, கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில், ஆர்.எஸ்.மங்கலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் தலைமையில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டன. தாசில்தார் சாந்தி, மத்திய கூட்டுறவு சங்க இயக்குநர் நாகராஜன், நகர் செயலாளர் ரகுமத்துல்லா, இளைஞர் அணி செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஏர்வாடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கீழக்கரை தாசில்தார் வீரராஜ் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட 100 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
* கமுதி அருகே சிங்கபுலியாபட்டி, வெள்ளையாபுரம் பகுதிகளில் 630 பேருக்கு தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, கமுதி வடக்கு மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் முன்னிலையில் தலா 5 கிலோ அரிசி, காய்கறி, மளிகை தொகுப்புகள், முகக்கவசம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X