இந்தியா

பா.ஜ., நிர்வாகிகள் போராட்டம்

Added : மே 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி, பருப்பு உடனடியாக வழங்க வலியுறுத்தி, பா.ஜ., வினர் நேற்று தங்கள் வீடுகள் முன் போராட்டம் நடத்தினர்.ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தாமதமின்றி இலவச அரிசி, பருப்பை உடன் வழங்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் நேற்று தங்கள் வீடு, அலுவலகங்கள் முன் கோரிக்கை அட்டையை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர்.பெத்துசெட்டிப்பேட்டையில் மாநில தலைவர் சாமிநாதன் போராட்டம் நடத்தினார். இதுபோல, பா.ஜ., நிர்வாகிகள் தங்களது வீடு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.பா.ஜ., தலைவர் சாமிநாதன் கூறும்போது, 'மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வசதியானவர்கள் இல்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 50 ஆயிரம் குடும்பங்கள் சிவப்பு அட்டைக்கு பதிலாக, மஞ்சள் அட்டையில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இலவச அரிசி இதுவரை வழங்கவில்லை. எனவே, மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X