தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் சுற்றுலா திட்டங்கள்.. முடக்கம்!: வருவாய் இன்றி தவிக்கும் தொழிலாளர்கள்

Added : மே 12, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரத்தில் சுற்றுலா திட்டங்கள் முடங்கியதால், இதனை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். தங்கும் விடுதிகள் முடங்கியதால் வங்கி கடன் செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலில்தரிசனம் செய்யவும், தனுஷ்கோடிக்கு ஓராண்டில் ஒரு கோடி பக்தர்கள்,சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால் மார்ச் 24ல் துவங்கிய ஊரடங்கால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா முற்றிலும் முடங்கியது.சுற்றுலாப் பயணிகளைநம்பி பாசி, சங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்று பிழைத்த சாலையோர சிறு வியாபாரிகள், நடை பாதை வியாபாரம் செய்வோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

இங்குள்ள 120 லாட்ஜ்கள், ஓட்டல்கள்முடங்கியது. பக்தர்கள், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள லாட்ஜ், ஓட்டல் உரிமையாளர்கள் வங்கியில் கடன் தவணை செலுத்தவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் தங்கும் விடுதி உரிமையாளர் சங்க செயலர் ஏ.நாகராஜ் கூறுகையில், ஓரிரு மாதத்தில் இயல்பு நிலை திரும்பினாலும், கொரோனா அச்சதில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருவதுசந்தேகமே. எனவே வங்கியில் கடன் தவணைக்கு வட்டி மற்றும் வருமான வரி, விற்பனை வரியை ரத்து செய்து சொத்து வரி, மின் கட்டணத்திற்கு மானியம்வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X