பொது செய்தி

தமிழ்நாடு

இணைதயளம் வழியான மது விற்பனை

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை : இணைதயளம் வழியான மது விற்பனை துவக்கப்படாத நிலையில், மது பிரியர்கள் பலரும், 'டாஸ்மாக்' இணையதளத்தை அதிகளவில் பார்ப்பதுடன், அதிகாரிகளை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 சில்லரை கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை விற்பனை செய்கிறது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில், நவீன மதுக் கடைகள் செயல்படுகின்றன. அங்கு, அதிக விலை உடைய, உயர் ரக மது வகைகள் விற்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுஇதனால், அந்த கடைகளில், 'HipBar' என்ற, மொபைல் செயலி வாயிலாக, மது வகைகளுக்கு பணம் செலுத்துவதுடன், அவற்றின் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

மற்ற மதுக் கடைகளில், அந்த செயலியின் சேவையை பெற முடியாது.ஊரடங்கால், மார்ச், 25ம் தேதி மதுக் கடைகள் மூடப்பட்டதுடன், மொபைல் செயலியின் சேவையும் நிறுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியது.ஒன்றரை மாதங்களுக்கு பின், இம்மாதம், 7, 8ம் தேதிகளில், டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில், கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக, பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகளில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.

இதனால், மதுக் கடைகளை மூட உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றம், இணையதளம் வாயிலாக, மது விற்பனை செய்யலாம் என, தெரிவித்தது; 9ம் தேதி முதல் மதுக் கடைகள் மூடப்பட்டன.தமிழக அரசின் அனுமதி மற்றும் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால், டாஸ்மாக் நிறுவனம் இணையதள மது விற்பனையை துவக்கவில்லை.சிலர், இணையவழி மது விற்பனையை துவக்கியதாகவும், அது தொடர்பான சந்தேகங்களை கேட்குமாறும், டாஸ்மாக் மாவட்ட, மண்டல மேலாளர்களின், மொபைல் போன் எண்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கூடுதல் விலை இது போன்ற தவறான தகவல்களையும், வதந்திகளையும், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது, நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், டாஸ்மாக் புகார் அளித்துள்ளது.இருப்பினும் பலர், மது விற்பனை தொடர்பாக, டாஸ்மாக் இணையதளத்தை பார்த்தபடி உள்ளனர். பலர், அதில் உள்ள, மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின், மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.

அப்போது, 'ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும், டாஸ்மாக் நிறுவனம், ஏன் இணையளத்தில் மது விற்பனையை துவக்கவில்லை?'அப்படி துவக்கினால், விரும்பாத மது வகைகளை கட்டாயப்படுத்தி விற்க முடியாது; பாட்டிலுக்கு, கூடுதல் விலை வசூலிக்க முடியாது போன்றவை தான் காரணமா' என, பல கேள்விகளை கேட்டு துளைத்தெடுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X