தந்தையை கொலை செய்த மனநலம் பாதித்த மகன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கொலை செய்த மனநலம் பாதித்த மகன்

Added : மே 13, 2020
Share

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, தந்தையை கொலை செய்த, மனநலம் பாதித்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தமுத்து, 61; மனைவி பச்சையம்மாள், 56. இவர்களுக்கு, இரண்டு மகன், மகள் உள்ளனர். மூத்த மகன் ஆறுமுகம், 37, மனநலம் பாதிக்கப்பட்டவர்.இந்நிலையில், காத்தமுத்து, அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக, அப்பகுதி, வி.ஏ.ஓ., சின்னமணிக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் பச்சையம்மாள் மட்டுமே இருந்தார். விசாரணையில், கணவருக்கு இதய அடைப்பு இருந்ததால், திடீரென இறந்து விட்டதாக பச்சையம்மாள் தெரிவித்து உள்ளார்.

பக்கத்து வீடுகளில் விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தை சங்கிலி மூலம் கட்டச் சென்ற காத்தமுத்துவை, ஆறுமுகம், தாக்கியதில் இறந்தது தெரிந்தது.வி.ஏ.ஓ., சின்னமணி புகாரின்படி, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X