ஏமாற்றமடைந்தது இந்தியா: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement
புதுடில்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது.நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய பிரதமர் மோடி, ஊரடங்கை 4வது கட்டமாக நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பொருளாதார
Randeep Singh Surjewala, Congress, Manish Tewari, Ashok Gehlot, Abhishek Singhvi, PM modi, Modi, narendra modi, modi news, coronavirus lockdown, modi announcement

புதுடில்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்., விமர்சித்துள்ளது.

நாட்டு மக்களிடம் நேற்று(மே 12) உரையாடிய பிரதமர் மோடி, ஊரடங்கை 4வது கட்டமாக நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பொருளாதார ரீதியா வலுவடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், காங்., மோடியின் உரையை விமர்சித்துள்ளது.


latest tamil newsதலைப்பு செய்தி:


மோடியின் உரை குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் பதிவிட்டதாவது: பிரதமர் அவர்களே.. நாட்டு மக்களிடம் நீங்கள் ஆற்றிய உரை, நாட்டிற்கும், ஊடகங்களுக்கும் வெறும் தலைப்பு செய்தியாக மட்டுமே இருக்கும். மக்களுக்கு மனமுவந்து உதவி அளிப்பதாக நீங்கள் அறிவித்திருந்தால், காங்., அதை வரவேற்றிருக்கும்.

தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பாதுகாப்பாக வர நடவடிக்கை தேவை. லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news
விவரங்கள் இல்லை:


காங்., கட்சியின் மணீஷ் திவாரி தனது டுவிட்டர் பதிவில், 'பிரதமர் மோடியின் உரையை ஒரே வார்த்தையில் கூறிவிடலாம்.. 'தலைப்புச்செய்தி.. 20 லட்சம் கோடி.. விவரங்கள் இல்லை..' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தாமதம் வேண்டாம்:


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், 'பிரதமர் மோடி அறிவித்த நிதி தொகுப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தாமதப்படுத்தக்கூடாது. இதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கிறோம். இதன் விவரங்கள் வெளியாகும்போது, வெவ்வேறு துறைகள் எவ்வாறு பயனடைகின்றன என்பதை நாங்கள் அறிவோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


என்னவாகுமோ?


காங்., கட்சியின் அபிஷேக் சிங்வி தனது டுவிட்டர் பதிவில், 'ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார் மோடி. இதுபோல அவரிடமிருந்து பல அறிவிப்புகளை கேட்டிருக்கிறோம். இது என்ன ஆகும் என்பதை பார்ப்போம்' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
16-மே-202020:28:41 IST Report Abuse
Amal Anandan வாராக்கடன் பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுக்கு 50000 கோடி கடன் இந்த மனசு யாருக்கு வரும். எதிர்க்கட்சிகள் என்னடானா ஏழை மக்களுக்கு என்ன செய்யப்போறீங்கன்னு கேட்குறாங்க.
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
14-மே-202002:37:12 IST Report Abuse
ayyo paavam naan காங்கிரஸ் இப்படி விமர்சிக்காவிட்டால் தான் இந்தியா ஏமாறும். இதில் புதிது என்ன? பிரதமர் உரை என்று அறிவித்த உடனேயே இவர்களின் கருத்து தயாராகிவிட்டதே. சாதாரண மனிதனுக்கு இந்த அரசு என்ன செய்து விட்டது? தெருவில் அலையும் ஏழை மக்களுக்கு கஞ்சி ஊத்த வில்லை. GST Demonetisation போலவே இதுவும் ஒரு தோல்வி. 20 லட்சம் கோடி ரூபாயை எங்கிருந்து கொண்டு வருவார்கள். அம்பானி அடானிக்கு உதவும் பாஜக என்றெல்லாம் காங்கிரசும். மேட்டுக்குடிக்கு மட்டும் இந்த அரசு உதவுகிறது தலித்துக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை பெரும்பான்மையினருக்கு மட்டுமே இந்த பணம் எல்லாம் கொடுக்கப்பட்டு விட்டது என்றெல்லாம் தமிழக எதிர்கட்சிகளும் ரெடிமேட் கருத்துக்களுடன் தான் காத்து இருந்தார்கள்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
13-மே-202019:55:03 IST Report Abuse
Loganathaiyyan ஒரு சிறு மாற்றம் ஏமாற்றமடைந்தது முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் கட்சிகளுக்கு ரூ 20 லட்சம் கோடியை பிரித்துக்கொடுப்பார் என்று பார்த்தால் சிறு குறு தொழில்களுக்கு அடமானம் இல்லாமல் கடன்??சே ஒண்ணும் சரியில்லே எனது ரூ 90 லட்சம் கோடி பெருகவே மாட்டேன் என்கின்றது என்று ஒரே புலம்பல் இந்த முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸிடமிருந்து.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
16-மே-202020:27:23 IST Report Abuse
Amal Anandanஊரே அடங்கிக்கிடக்கும் பொது விவசாய கடன் கொடுத்த சொல்றதை நம்பும் கூட்டமிருக்கும் வரை ஒன்னும் செய்யமுடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X