சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தனிமை முகாமில் சுவரில் துளையிட்டு தப்ப முயற்சி

Added : மே 13, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளது.விஷ வண்டுகள் கடிப்பதால் தங்கி இருப்பவர்கள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் இல்லாததால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலையில் தவிக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனையும் செய்யவில்லை.இங்கு தொடர்ந்து இருந்தால் நோய் பரவும் என்ற அச்சத்தில் முகாமில் பல நாட்களாக அவதிப்படுவோர் சுவரில் துளையிட்டு தப்பிக்க முயன்றனர். இதனை பார்த்த பாதுகாப்பு பணி போலீசார் துளையிட்ட பகுதியை சீமைக்கருவேல முட்களை போட்டு அடைத்துள்ளனர். விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X