தமிழ்நாடு

முடங்கியது சிங்கம்புணரியில் கரி மூட்டத்தொழில் வருமானத்தை இழந்த தொழிலாளர்கள்

Added : மே 13, 2020
Share
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் ஊரடங்கால் கரிமூட்டத்தொழில் பாதிக்கப்பட்டுஉள்ளது. மக்கள்
வருவாய் இன்றி தவிக்கின்றனர்.

காளாப்பூரில் பல ஆண்டுகளாக இத்தொழில்நடந்து வருகிறது. இதை நம்பி 15க்கும் மேற்பட்ட
குடும்பங்கள் உள்ளன. சீமை கருவேல மர வேர்கள், குச்சிகளை அடுக்கி மூடிய பின் தீ மூட்டி
3 அல்லது 4 நாட்களில் பிரிக்கப்படும். மூட்டம்போட்டு பிரித்தெடுக்கப்படும் கரி, துாள்கரி, துார்கரி, உருட்டுக்கரி, குச்சிக்கரி, மண் கரி என 5 வகையாக தரம்பிரிக்கப்படும்.

இதில் துாள்கரி, மண்கரி ஊதுபத்தி,கொசுவர்த்திச் சுருள்தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாகவும், உருட்டுக்கரி, குச்சிக்கரி தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஹோட்டல்களுக்கும், துார்கரி இரும்பு உருக்கும் ஆலைகள்,பட்டறைகள் போன்றவற்றுக்கும், சிறிய அளவிலான கரித்துண்டுவண்டிப் பட்டறைபோன்றவற்றிற்கும், கரித்துாள் சிமென்ட் ஆலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.அந்தமான், கோல்கட்டா, ஆந்திரா, சென்னை, கோவை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குஇங்கிருந்து கரி கொண்டு செல்லப்படுகிறது.

கரிமூட்டம் போடும் பாண்டியராஜன் கூறியதாவது:தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தயார் நிலையில் உள்ள 20 டன் கரி மூடைகள் தேக்கமடைந்துள்ளது.ஊரடங்கு இல்லாவிட்டால் 40 டன் வரை தயாரித்திருப்போம். தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். உரிமையாளரும் கடன் வாங்கி தொழில் செய்கிறார். அவர்களால் முடிந்த அளவிற்கு உதவி செய்கின்றனர்.

தினக்கூலியாக வேலை பார்ப்பதால் ஒரு மாதத்திற்கும் மேலான ஊரடங்கால் காளாப்பூரில் இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் குடும்பம் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X