பொது செய்தி

தமிழ்நாடு

ஆடை வர்த்தகத்தில் சீன ஆதிக்கம் சரியும்?:வல்லுனர்கள் கணிப்பு

Updated : மே 14, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருப்பூர் : உலகளாவிய நாடுகளின் நம்பகத்தன்மையை இழந்துள்ளதால், ஆடை வர்த்தகத்தில், சீன ஆதிக்கம் இனி சரியும் என்பது, வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.உலக அளவில், 35 சதவீதத்துக்கும் அதிகமான ஆடை வர்த்தகம், சீனா வசம் உள்ளது. கொரோனாவுக்கு பின், உலக ஆடை வர்த்தக சந்தையில், சீனா சாம்ராஜ்யம் சரியும் என்பதே, வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்'
ஆடை வர்த்தகத்தில் சீன ஆதிக்கம் சரியும்?:வல்லுனர்கள் கணிப்பு

திருப்பூர் : உலகளாவிய நாடுகளின் நம்பகத்தன்மையை இழந்துள்ளதால், ஆடை வர்த்தகத்தில், சீன ஆதிக்கம் இனி சரியும் என்பது, வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.உலக அளவில், 35 சதவீதத்துக்கும் அதிகமான ஆடை வர்த்தகம், சீனா வசம் உள்ளது.

கொரோனாவுக்கு பின், உலக ஆடை வர்த்தக சந்தையில், சீனா சாம்ராஜ்யம் சரியும் என்பதே, வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.'இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்' கூட்டமைப்பின், 'கன்வீனர்' பிரபு தாமோதரன் கூறியதாவது:சீனாவின் வெளிப்படைத்தன்மை இல்லாமையே, கொரோனா பரவலுக்கு காரணமாக உள்ளது. இது, சர்வதேச அளவில், அந்நாட்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்துள்ளது.

நடப்பு ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்காவுக்கான சீனாவின் ஆடை ஏற்றுமதி, 52 சதவீதம் சரிவடைந்துள்ளது. இனி, இந்த சரிவு அதிகரிக்கும். இது, இந்தியா, வியட்நாம், கம்போடியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர் நாடுகளுக்கு சாதகமாக அமையும். இந்திய அரசு, இத்தருணத்தை பயன்படுத்தி, உற்பத்தி துறை சார்ந்த தைரியமான சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். செயற்கை இழை ஆடை தயாரிப்பு மேம்பாட்டுக் கான சிறப்பு திட்டங்கள் வகுப்பது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202020:37:06 IST Report Abuse
கதை சொல்லி GST, பணமதிப்பிழப்பு... உண்மையான காரணங்களை கண்டறிந்து களையாத வரை எதிலும் வெற்றி பெற முடியாது. உற்பத்தியின் போதே தரத்தை பின்பற்றாதவரை, தரமற்றதையும் ஏற்றுமதி செய்திடுவதையும் தவிர்காதவரை உலக சந்தையில் நிற்க முடியாது...
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
13-மே-202019:31:51 IST Report Abuse
K.Muthuraj சீனாவின் உள் கட்டுமானம் தெரியாமல் கருத்திடுகின்றார்கள் சீனா fully automated machines அவர்களின் சொந்த தயாரிப்பாகவே வைத்துள்ளார்கள். அதனால் price war -ல் எளிதாக வென்று விடுவார்கள். இங்கே வேலை வாய்ப்பு என்ற காரணம் கூறி அனைத்தும் செமி ஆட்டோமேட்டிக் ஆக உள்ளது. அதுவும் சீனா imported machines வைத்து thaan வேலை செய்கின்றார்கள்
Rate this:
Cancel
VTR - Chennai,இந்தியா
13-மே-202012:53:33 IST Report Abuse
VTR Since quite a chunk has moved to Bangladesh already, it important to act on a war footing. The respective industry needs to be enlightened on the ways to make use of the opportunity. Apprehension wrt to GST constraints need to be looked into and a customer-friendly environment to be d. Industry stakeholders also have to look and accept for a win and win situation
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X