பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணத்திற்காக காய்கறி தோட்டம் ஊராட்சி தலைவரின் புதிய முயற்சி

Added : மே 13, 2020
Share
Advertisement

காரைக்குடி:பெரியகொட்டகுடி ஊராட்சியில், ஊரடங்கால் மக்கள் வெளியே செல்வதை தடுக்க ஊராட்சி தலைவர் காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்.
சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கொட்டகுடி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த ஊராட்சி தலைவர் தனபால். ஊரடங்கால் கடந்த
7 வாரங்களாக, இப்பகுதி மக்களுக்கு சொந்தசெலவில் காய்கறிகளை வழங்கி வருகிறார்.
இப்பகுதியில், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பழத்தோட்டம் அமைக்கும் பணி நடந்து
வருகிறது. அத்துடன், காய்கறிதோட்டம் அமைக்கஎண்ணிய இவர், 2 ஏக்கர் கருவேல மரங்கள் மண்டி கிடந்த இடங் களை சுத்தம் செய்து, காய்கறி தோட்டம் அமைத்துள்ளார்.

இத்தோட்டத்தில், கீரைவகைகள், கத்தரி, முள்ளங்கி, அவரை, தக்காளி, உள்ளிட்ட 10 வகை காய்கறிகள், பழக்கன்றுகள் பயரிடப்பட்டுஉள்ளன. மக்களின் நலம்கருதி அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை, சாக்கோட்டைசேர்மன் சரண்யாசெந்தில், பி.டி.ஓ.,க்கள் திருப்பதி, ஸ்ரீதர் பார்வையிட்டனர்.

ஊராட்சி தலைவர் தனபால் கூறுகையில், மக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்வதை
தவிர்த்திட, வாரம் ஒருமுறை என 7 வாரங்களாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு நின்று விடாமல், தொடர்ந்து காய்கறிகளை வழங்கிட காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஊரடங்குக்காக மட்டுமில்லாமல் தொடர்ந்து, காய்கறிகளை பயிரிட முடிவு செய்துஉள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X