பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் மாடுகளுக்கு கோசாலை பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : மே 13, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் சுற்றி திரியும் கோயில் மாடுகளை கோசாலையில் அடைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் நகரில் வலம் வந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. மாடுகள் அவற்றிற்குள் சண்டை போட்டு காயமடைவதுடன் பலரையும் காயப்படுத்தி வருகின்றன. வாகனங்களில் அடிபட்டு சில கோயில் காளைகள் ரோட்டில் சிரமப்படுகின்றன.

தி.புதுார் கர்ணன் கூறுகையில், கோயில் மாடுகள்பலவும் வாகனங்களில் அடிபட்டு காயத்துடன் நடமாடுகின்றன. அவற்றை கோசாலையில் அடைத்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும், நேற்று பிரதான சாலையில் கன்று ஈன்ற கோயில் மாட்டால் பால் கொடுக்க முடியாமல் கன்று குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.

நள்ளிரவில் நடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. அதிகாலையில் கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தும் கன்று குட்டியை காப்பாற்ற முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கோசாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X