ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம்

Added : மே 13, 2020
Share
Advertisement

புதுடில்லி : சரக்கு ரயில் மோதி பலியானோர் குடும்பத்தினருக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள, இரும்பு ஆலையில் பணியாற்றிய ம,பி., மாநில தொழிலாளர்கள், 20 பேர், தங்கள் சொந்த ஊருக்கு, ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.அவுரங்காபாத் அருகே, 8ம் தேதி இரவில், தண்டவாளத்திலேயே படுத்து உறங்கிய அவர்கள் மீது, சரக்கு ரயில் மோதியதில், 16 பேர் பலியாயினர்.இவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து, தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, பிரதமர், நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X