எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்,மதுக்கடை,அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகம்: கொரோனா தொற்று பரவ வாய்ப்பு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மார்க்கெட்,மதுக்கடை, வட்டார போக்குவரத்து அலுவலகம், கொரோனா தொற்று, பரவ வாய்ப்பு

கொரோனா பரவலால் இந்தியாவில் 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்தான் தொற்று பரவல் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய பட்டியலில் இல்லாத டாஸ்மாக் மதுக்கடையை பல எதிர்ப்புக்கு மத்தியில் மாநில அரசு திறந்தது. முதல்நாளே பல லட்சம் பேர் மதுக்கடைகளில் குவிந்தனர். இவர்களுக்கான பாதிப்பு இன்னும் 2 வாரங்களுக்குப் பின்பே தெரியவரும். தடை உத்தரவையடுத்து டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக தற்போது ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று முதல் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 172 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. வாகன பதிவு, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல், தகுதிச்சான்று என பல்வேறு காரணங்களுக்காக தினமும் அலுவலகத்திற்கு 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்வர்.இங்கு சமூக இடைவெளி கடைபிடித்தாலும் கூட ஓட்டுனர் உரிமம் வேண்டுவோர் 'டிஜிட்டல் பேடில்' கையெழுத்திடுவது மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இத்தனைக்கும் புதுப்பித்தல், வரிசெலுத்துதல் உட்பட அனைத்துக்குமான கால அவகாசத்தை மத்திய அரசு ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. வேறெந்த மாநிலமும் அவசரம் காட்டாத நிலையில், தமிழகம் மட்டும் அவசரப்படுவது ஏனென்று தெரியவில்லை.

இதுதொடர்பாக விசாரித்ததில், ''ஊரடங்கு சூழலில், போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு வரி கட்டுவது மே 15ல் முடிகிறது. அதனை ஜூன் இறுதி வரை நீட்டிக்க ஆணை வெளியிட
வேண்டும். அதை செய்யாத அரசு முன்னேற்பாடுகள் இல்லாமல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை துவக்குவதால் வைரஸை பரப்பும் மையமாக மாறும்'' என்றனர்.
-- நமது சிறப்பு நிருபர்--

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
13-மே-202010:22:10 IST Report Abuse
G.Prabakaran எல்லாம் வசூலை குறிவைத்து செய்யும் செயல்கள். தின மேற்படி வசூல் அமைச்சர் வரை செல்வதாக செய்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X