தமிழ்நாடு

இதையும் அகற்றலாமே ! நகர்களில் கொடி கட்டி பறக்கும் ஆக்கிரமிப்புகள்: சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது அவதி

Added : மே 13, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள நிலையில் நெருக்கடியால் மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாது தவிக்கும் நிலை தொடர்கிறது.

மாவட்டத்தில் நகராட்சிகள் ,ஊராட்சி ஒன்றிய கட்டுப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. க பஜார் பகுதிகள், நடைபாதைகள் என அனைத்தும் நிரந்தர ஆக்கிரமிப்புகளாக மாறி விட்டன. கடைகளில் 'சன்ேஷடுகள்' என்ற பெயரில் ஆக்கிரமிப்பு, நடைபாதை வரை கடைகளை பரப்பி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் இது தொடர் கதையாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையும் பெயருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன்பின் கண்காணிக்காததால் மீண்டும் தொடர்கிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.இதில் தளர்வு ஏற்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து துவங்காத இந் நேரத்தில் நகராட்சி, நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு நடைபாதைகளை சீரமைத்து பொதுமக்கள் எளிதில் சென்றுவர வழிகாணுவதோடு இந்நேரத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நடந்து செல்லவும் வசதியாக அமையும்.


இப்போதே துவங்கலாமே

நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும். நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினால் ரோட்டில் நடந்து செல்லும் மக்கள் நடைபாதைகளில் நடந்து செல்வர். சமூக இடைவெளியை பின்பற்றியும் நடக்க முடியும். ஊரடங்கு முடிவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நகர் நல பிரிவு முனைப்பு காட்ட வேண்டும்.

ராஜசேகர், தனியார் ஊழியர் ,அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X