பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை நெட்டி வேலைப்பாடு அரும்பாவூர் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு

Added : மே 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 தஞ்சை நெட்டி வேலைப்பாடு  அரும்பாவூர் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: தஞ்சை நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த நெட்டி செடிகள், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, நீர்நிலைகளில் விளையும். இதன் நடுப் பாகம் தாமரை தண்டு போல நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.
இதை உலர்த்தி, பதப்படுத்தி, தஞ்சாவூர் பெரிய கோவில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்ற மாதிரிகள் செய்து விற்கப்படுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதன் வெண்மை வண்ணம் மாறாமல் இருக்கும்.அரும்பாவூர் மரச்சிற்பம்பெரம்பலுார், அரும்பாவூர் மரச்சிற்பத்துக்கு, 250 ஆண்டு வரலாறு உள்ளது. தமிழகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், வடபழநி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களின் தேர்கள், இவ்வூர்
கலைஞர்களால் உருவாக்கப்பட்டன.அத்துடன், 1 அடி முதல், 12 அடி வரையிலான பல வகையான சிற்பங்களும் செய்யப்படுகின்றன. வெளிநாட்டினரால் இந்த மரச்சிற்பங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன.

இயந்திரம் இல்லாமல், உளி, சுத்தியல் உபகரணங்கள் பயன்படுத்தி, சிற்பங்கள் செய்யப்படுவது தான் இதன் தனிச்சிறப்பு.விண்ணப்பம்தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2013ல், இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிக்கபட்டது. தஞ்சை வக்கீல் சஞ்சய் காந்தியின் சட்டப்படியான முயற்சிகளால், இரு பொருட்களுக்கும், தற்போது, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதற்கான உத்தரவு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
13-மே-202013:59:40 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் வடக்கில் உள்ள தாஜ்மஹால்(அது ஒரு கல்லறை, மும்தாஜ், ஷாஜகானுக்கு மூன்றாவது மனைவி என்பது வேறு விஷயம்) சிற்பம் போல , இந்த சிற்பங்கள் பெறவேண்டும். இதுவரை இதை கேள்விப்பட்டதில்லை. இந்த கலை-கலைஞர்கள் வாழவேண்டும்
Rate this:
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
13-மே-202010:48:34 IST Report Abuse
Kadambur Srinivasan இதன் பயனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X