பொது செய்தி

தமிழ்நாடு

விலையும் உயர்ந்தது; வாங்கும் சக்தியும் குறைந்தது தளர்விலும் தவியாய் தவிக்கும் மக்கள்

Added : மே 13, 2020
Share
Advertisement

ஒன்றரை மாத ஊரடங்கால் மக்களிடையே பொருளாதாரம் மிகவும் பின்தங்கி விட்டது. தினக்கூலிகள், மாத வருவாய் பெறும் தனியார் ஊழியர்கள், ஆட்டோ, வாடகை கார் டிரைவர்கள் என பலரும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். மார்ச் ஊதியத்தை கொண்டு ஏப்ரல் சமாளிக்க முடிந்தது. ஏப்ரல் துவக்கத்தில் கடைகளில் நின்ற கூட்டம் தற்போது இல்லை. இதன் மூலம் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்து விட்டதை உணர முடிகிறது. மக்களில் 60 சதவீதம் பேர் தினசரி உழைத்து ஊதியம் பெறுபவர்கள் தான். அவர்களும் 50 நாட்களில்
பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளனர். தளர்வுகள் அறிவித்த நாள் முதல் கடைகளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்த்த வியாபாரிகள் ஏமாந்து போயினர். மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் குறைந்த அளவிலான மக்களே பொருட்களை வாங்கி செல்கின்றனர். தொழில் நிறுவனங்களும் இயங்க துவங்கி விட்டதால் பல இடங்களில் முதலீடுகள் அனைத்தும் மூலப்பொருட்கள் வாங்குதல், பராமரிப்பு செலவு ஆகியவற்றிற்கு செலவளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பண புழக்கம் இன்னும் அதிகரிக்கவில்லை. நாட்கள் செல்ல தான் பணப்புழக்கம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும். இதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், அத்தியாவசியமில்லாத பொருட்கள் என அனைத்து வகை பொருட்களில் விலையேற்றம் காணப்படுகிறது. காய்கறி, மளிகை பொருட்கள் ஏழைகள் எளிதில் வாங்க முடியாத விலைக்கு விற்கப்படுகிறது. இவற்றை சார்ந்த ஓட்டல்களிலும் உணவுகளின் விலையும் உயர்ந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை பார்க்கும் பிற வியாபாரிகளும் விலையை ஏற்றி கொள்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு குழுக்களை அமைத்து முறையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் நாட்களில் ஏழை மக்கள் எந்த பொருட்களும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

பாதியாக குறைந்த வியாபாரம்

சிவகாசியில் பொதுவாக எந்த ஒரு வியாபாரமும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழிலாளர்களை நம்பியே இயங்குகிறது. இவர்களால் 50 சதவீத வியாபாரம் நடைபெறுகிது. ஊரடங்கால் 40 நாட்களுக்கு மேலாக தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் இவர்களுக்கு வருமானம் இல்லை. பட்ஜெட் போட்டு கூட பொருட்களை வாங்க முடியவில்லை. தற்போது 80 சதவீத கடைகள் இயங்குகின்றன. ஆனால் பொருட்களை வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை. நடுத்தர மக்களும் தேவையான பொருட்களை குறிப்பிட்ட அளவிற்கே வாங்குகின்றனர். இதனால் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டது. தற்போது ஆலைகள் இயங்க துவங்கினாலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க இன்னும் நாட்களாகும். பணப்புழக்கம் அதிகரித்த பின்னரே வியாபாரம் சுறுசுறுப்படையும்

.ரவிஅருணாச்சலம், வர்த்தக சங்க உப தலைவர், சிவகாசி.

ஊரடங்கு பின் விலைகள் குறையும்

கொரோனா உலகத்தையே புரட்டி போட்டது மட்டும் அல்லாமல் பல தரப்பட்ட தொழில்களையும் புரட்டி போட்டு விட்டது. மக்களிடத்தில் பண புழக்கம் குறைந்து விட்டது. பணம் இருந்தாலும் செலவழிக்க யோசனை செய்கின்றனர். தேவைக்கேற்ப மட்டுமே பொருட்களை வாங்குகின்றனர். உற்பத்தி நிறுத்தம், வெளி மாநிலங்களிலிருந்து பொருட்கள் வராதது போன்ற காரணத்தினால் ஒருசில பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. ஊரடங்கு பின் இதன் விலைகளும் சீரடைந்து விடும்.ஆனாலும் முன்பு போல் வியாபாரம் இருக்காது. ஒராண்டுக்கு பின்பு தான் தொழில்கள் சீரடையும். வியாபாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். அரசும் திகைப்பில் உள்ளது.

கணேஷ்குமார், உரிமையாளர்,பூட்ஸ் சுவை அங்காடி, அருப்புக்கோட்டை.

10 ரூபாய் கணக்கில்தான் வாங்குகின்றனர்

ஊரடங்கு துவங்கியபோது வழக்கம்போல் கிராம மக்கள் காய்கறி வாங்கி சென்றனர். ஆனால் தற்போது உள்ளூர் மக்கள் மட்டும் தான் குறைந்தளவே வாங்குகின்றனர். கிராமத்தில்
கிடைக்கும் காய்கறிகளை அப்பகுதி மக்கள் வாங்கி கொள்கின்றனர். தற்போது 50 சதவீத
விற்பனை குறைந்துள்ளது. பொதுவாக பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதால் காய்கறி விற்பனை மிகவும் உச்சத்தில் இருக்கும். தற்போது அதற்கு நேரேதிரான நிலை காணப்படுகிறது. தெருக்களில் சென்று விற்கும் காய்கறிகள் கூட குறைந்தளவே விற்கிறது. மக்களிடம் பணப்புழக்கும் குறைந்து வருகிறது. கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கூட 10 ரூபாய் கணக்கில்தான் வாங்குகின்றனர்.
-ராம்தாஸ், காய்கறி வியாபாரி, ஸ்ரீவில்லிபுத்துார்.

விரைவில் பொருளாதார மந்தம் சீராகும்

மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது உண்மை தான். ஊரடங்கில் 35 சதவீத
அத்தியாவசிய தொழில் நிறுவனங்கள் இயங்கியது. மின்சார வாரியம் தொழிற்சாலை
இயங்கினாலும், இயங்காவிட்டாலும் மின்கட்டணம் வசூலிக்கின்றனர். அத்தியாவசிய நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்றாலும் மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமம், விற்பனைக்கு சரக்கை அனுப்புவதில் சிரமம் என பல சிரமங்கள் சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக நடுத்தர நிறுவனங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் ஊரடங்கு நேரத்தில் வழக்கமான லாரி சேவை இல்லாததுதான். இதனால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்கள் விற்பனைக்கு சென்றடைவதில் தாமதம் நீடித்தது. இந்த தாமதத்தால் ஏற்பட்ட சரக்கு தட்டுபாடு தான் விலையேற்றத்திற்கு முக்கிய
காரணம். தற்போது அனைத்து சேவைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
விரைவில் பொருளாதார மந்தம் சீராகும்.

இதயம் முத்து, தலைவர்,

விருதுநகர் மாவட்ட சிறு, குறு வியாபாரிகள் சங்கம், விருதுநகர்.

பொருட்கள் அளவை குறைத்து விட்டோம்

அரசு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி தந்தது. ஒரு வாரம் கூட தாங்கவில்லை. காய்கறி மளிகை சாமான்கள் விலை இரண்டு மடங்காக உயர்ந்த நிலையில் போதுமான வருமானம் இல்லாததால் வாங்கும் பொருட்களின் அளவை குறைத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தொற்றிலிருந்து காத்து கொள்ள அடிக்கடி காய்கறி சூப் சாப்பிட அரசு அறிவுறுத்துகிறது. வருமானம் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு கூட சத்தான ஆகாரம் வழங்க முடியவில்லை. வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றை நினைத்தால் அச்சமாக உள்ளது. ஊரடங்கிற்கு முன்பு அடிக்கடி டீ, காபி சாப்பிடுவோம். தற்போது காலை,மாலை என 2 வேளை மட்டுமே டீ, காபி சாப்பிடுகிறோம். சாப்பாட்டிற்கு காய்கறி கூட்டு வைப்பதில்லை. சிக்கன், மட்டன், மீன் இறைச்சிகள் விலை உயர்வால் அதன் பக்கமே போகவில்லை.

மகேஷ்வரி, குடும்பத்தலைவி, சாத்துார்.

நமது நிருபர் குழு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X