சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்திற்குள் புகுந்த கரடி 5 மணி நேரத்திற்கு பின் மீட்பு

Added : மே 13, 2020
Share
Advertisement
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே கிராமத்திற்குள் புகுந்த கரடியை 5:00 மணி நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.இங்குள்ள மகாராஜபுரம் மாத்துார் மலையடிவாரப்பகுதி சீமைகருவேல புதரில் கரடி ஒன்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் போலீஸ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர்புகை போட்டு விரட்டியபோது கிராமத்திற்குள்

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே கிராமத்திற்குள் புகுந்த கரடியை 5:00 மணி நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

இங்குள்ள மகாராஜபுரம் மாத்துார் மலையடிவாரப்பகுதி சீமைகருவேல புதரில் கரடி ஒன்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் போலீஸ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர்புகை போட்டு விரட்டியபோது கிராமத்திற்குள் புகுந்தது. மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 50 க்கு மேற்பட்ட வனத்துறையினர் கரடியை பிடிக்க தெருப்பகுதியில் வலைவிரித்தனர். வலையில் சிக்காத கரடி தெருவிற்குள் ஓடியது. 5:00 மணிநேர போராட்டித்திற்கு பின் சிக்கியது.மாவூத்து வனப்பகுதியில் கொண்டு விட்ட பின் மக்கள் நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X