பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கல்

Added : மே 13, 2020
Share
Advertisement
 கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கல்

உத்தமபாளையம்:க.புதுப்பட்டியில் உள்ள ஜெ.ஆர். குழும நிறுவனங்கள் சார்பில் இங்குள்ள ஜெ.ஆர். திருமண மகாலில் கொரோனா நிவாரணப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழும நிறுவன நிர்வாக இயக்குனர் எல்.ரவி, அவரது மனைவி ஜமுனா ஆகியோர் , 500 குடும்பத்தினருக்கு உயிருடன் ஒரு கிலோ கோழி மற்றும் 9 வகையான காய்கறி தொகுப்பை நிவாரணமாக வழங்கினர்.

தேவதானப்பட்டி


சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களின் பெற்றோர்கள், ஊராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட கொரோனா நிவாரணப்பொருட்களை தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் வழங்கினர். ஆசிரியைகள் ஜெயந்தி, விஜயா, கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சாந்தி கலந்து கொண்டனர்.

போடி:

போடி அருகே சோலையூர், மேலப்பரவு, முதுவாக்குடி மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ஓனவே டிரஸ்ட் சார்பில் அரிசி, மளிகைப்பொருட்கள், முகக்கவசங்களை சப்கலெக்டர் நிறைமதி வழங்கினார். லா டிரஸ்ட் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பெரியகுளம்

பெரியகுளத்தில் தி.மு.க., நகர செயலாளர் முரளி தலைமையில் மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஜீவராஜ் ,50 குடும்பத்தினருக்குஅரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார். வார்டு செயலாளர் ஆரோக்கியம்உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X