பொது செய்தி

தமிழ்நாடு

'நன்றி சொல்லுங்க...'மாநகராட்சி, சுகாதாரதுறைக்கு

Added : மே 13, 2020
Share
Advertisement





திருப்பூர், மே 13-திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா கோரதாண்டவம் ஆடியும், ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்துவிடாமல், ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளது.மாவட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை, தாராபுரம் ஆகிய பகுதிகளில், கொரோனா தொற்று இருந்தது. கொரோனா பாதித்த நபர்களின் குழந்தைகளையும் தாக்கியிருந்தது. மாவட்டத்தில், 12 வயதுக்கு குறைந்த, 10 சிறுமியர், ஏழு சிறுவர் என, 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அடுத்தபடியாக, 13 முதல், 25 வயது வரையுள்ள, 16 ஆண்கள்; ஆறு பெண்கள் என, 22 பேரை, கொரோனா தீண்டியிருந்தது.இளைஞர் மற்றும் நடுத்தர வயதுள்ள, 26 முதல், 40 வயதுள்ளவர்களில், 18 ஆண்கள், 16 பெண்கள் என, 34 பேருக்கு பாதிப்பு இருந்தது. அடுத்ததாக, 61 முதல், 85 வயது வரையுள்ள, மூன்று ஆண்; நான்கு பெண்கள் என, ஏழு பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.மாவட்டத்தில் மொத்தம், 69 ஆண்கள்; 45 பெண்கள் என, 114 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய நிலவரப்படி, அனைவரும் குணமாகிவிட்டனர். மாவட்ட எல்லைக்குள், கடந்த மாதம், 26ம் தேதிக்கு பிறகு, கொரோனா தொற்று பாதிக்கவில்லை. சென்னை சென்று வந்த இருவருக்கு மட்டுமே பரவியிருந்தது.அதன்படி, 14 நாட்களை கடந்துவிட்டதால், சிவப்பு பட்டியலில் இருந்த திருப்பூர் மாவட்டம் நேற்று, ஆரஞ்சு பட்டியலுக்கு மாறிவிட்டது. மாவட்டத்தில், 26 முதல், 60 வயதுள்ள நபர்கள், 68 பேர் பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் மற்றும் முதியோர்களை, கொரோனா அதிகம் தாக்கும் என, அச்சம் நிலவியது. இருப்பினும், ஒரு வயது குழந்தை உட்பட, ஏழு குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்; 85 வயதுள்ள முதியவரும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இருப்பினும், நடுத்தர வயதுள்ள நபர்களை போலவே, அவர்களும் எளிதாக மீண்டு வந்துவிட்டனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறையும், பாதிக்கப்பட்டவர்களை போராடி, கரைசேர்த்துவிட்டது. போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் போராடி, நோய் பரவாமல் தற்காத்தனர்.கொரோனா தடுப்புக்குழு என்ற பெயரில், நோய் தடுப்பு, நிவாரணம் வழங்கல் என, அனைத்து பணிகளிலும், மாவட்ட நிர்வாகத்துக்கு தோள் கொடுத்தவர்கள் ஏராளம்.
இருப்பினும், மக்கள் அஜாக்கிரதையாக இருந்தால், மீண்டும் கொரோனா தலைதுாக்கும். எனவே, ஒவ்வொரு நபரும், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிந்து வெளியே சென்று வருவது, அனைத்து இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என, இருந்தால் மட்டுமே, நிரந்தரமாக கொரோனா அரக்கனுக்கு விடை கொடுக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X