பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தடை

Added : மே 13, 2020
Share
Advertisement

தேனி:''தேனி மாவட்டத்தில் 14 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை பாயும்,'' என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அதன் அறிக்கை:மாவட்டத்தில் மே 10க்கு முன் நான்கு நாட்களில் தேவதானப்பட்டி, லோயர்கேம்ப், ஆண்டிபட்டி சோதனைச் சாவடிகளில் வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வந்த 81 பேருக்கு சளி, எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் வீட்டில் 14 நாட்களும், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 28 நாட்களும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் தொடர்பில் உள்ளவர்கள் கண்டறியப் பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், வீட்டுத்தனிமையில் உள்ளவர்கள் வெளியே வரக்கூடாது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் கொரோனா தடுப்புக்காக தனிமைப்படுத்தப்பட்ட 15 பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பொது அறிவிப்பிற்காக ஸ்பீக்கர், மைக் எஸ்.பி., உத்தரவில் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X