பொது செய்தி

தமிழ்நாடு

'சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களை தடுக்க கூடாது'

Added : மே 13, 2020
Share
Advertisement

சூலுார்:"சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் வடமாநில தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் தடுக்க கூடாது," என, வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.சூலுார் தாலுகாவில், மில்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பவுண்டரி உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர்கள், சொந்தஊருக்கு செல்ல முடிவு செய்து, தாலுகா அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்துவருகின்றனர். சில நிறுவனங்கள், தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப மறுப்பதாக புகார்எழுந்தது.சூலுார் தாசில்தார் மீனாகுமாரி கூறுகையில், "தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு செல்ல விரும்பினால், அவர்களை தடுக்கக்கூடாது. ஊருக்கு செல்ல விரும்புவோர் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின பயணத்துக்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X