திண்டுக்கல்:திண்டுக்கல் போக்குவரத்து கழகத்தில் பஸ்களை பழுது பார்க்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. மே 18 முதல் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பஸ்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மண்டலத்தில் பஸ்களை பழுது பார்க்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல், தேனியில் 900 பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ரூ.25 முதல் 40 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். தற்போது ஊரடங்கு காரணமாக 49 நாட்களாக பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் பஸ்கள் ஓடாமல் இருப்பதால் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. எந்நேரமும் ம் அரசிடம் இருந்து உத்தரவு வரும் என்பதால், 33 சதவீத பணியாளர்களுடன் பஸ்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது.
பஸ்களை பணிமனை வளாகத்திலேயே இயக்கி இன்ஜின், சக்கரம், இருக்கைகள், விளக்குகள், ஒலிபெருக்கி, பிரேக்குகள் பழுது பார்த்து தயார் படுத்தப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் இருக்கைகளில் பயணிகள் அமர்வதற்கான குறியீடுகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க, முகக்கவசம் அணிவதை அறிவுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளது என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித் தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE