பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் இல்லேனா 'கெட் அவுட்' மாநகராட்சி வலியுறுத்தல்

Added : மே 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் முதல் 34 வகையான கடைகளை காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடைகள் திறப்பால் பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக செல்கின்றனர். இந்தக் கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.சிறிய கடையாக இருந்தால் 2 பேர், பெரிய கடையாக இருந்தால் 3 பேர் வரை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை உள்ளே அனுமதிக்கவே கூடாது.வாங்கும் பொருள் தவிர மற்ற பொருட்களை தொட அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் கைகழுவ கிருமிநாசினி இருக்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வட்டமிட வேண்டும். விதிமீறி, பொருட்கள் விற்றால் அபராதம் விதிப்பதோடு, கடை பூட்டி சீல் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி கொள்ள வேண்டும். ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை. அதனால் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X