தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் சென்றதால் அவதி ! மதுரையில் தொழில்கள் பாதிக்கும் சூழல்

Added : மே 13, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மிகக்குறைந்த சம்பளம், கடின உழைப்பு என்ற 'தகுதி' அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை மாவட்டத்தில் ஓட்டல், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வேலை இழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் செல்ல வழியின்றி பணி செய்த இடத்திலேயே தங்கினர்.ஒரு வாரமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 வடமாநில தொழிலாளர்கள் சென்றதால் அவதி !  மதுரையில் தொழில்கள் பாதிக்கும் சூழல்மிகக்குறைந்த சம்பளம், கடின உழைப்பு என்ற 'தகுதி' அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை மாவட்டத்தில் ஓட்டல், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வேலை இழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் செல்ல வழியின்றி பணி செய்த இடத்திலேயே தங்கினர்.ஒரு வாரமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அரசு ஏற்பாட்டின்படி கிளம்பி செல்வதால் போதிய ஆட்கள் கிடைக்காமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கப்பலுார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது: தொழிற்சாலைகளில் 20 - 40 சதவீதம் வரை வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். கடினமான வேலைகளை சுலபமாக செய்தனர். ஊரடங்கால் அவர்களுக்கு சம்பளம், சாப்பாடு, மருத்துவ வசதிகளை 45 நாட்களுக்கும் மேலாக தொழிற்சாலை நிர்வாகங்கள் செய்து கொடுத்தன. ஊரடங்கு முடியும் நிலையில் தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதால் தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றார்.
அதிகாரிகள் குழு நியமனம்
வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருப்பவர்களுக்கு உதவ தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., கண்ணன் 88255 53805, தாசில்தார் பாண்டியன் கீர்த்தி 99763 45460 நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மாநிலங்களுக்கு செல்ல தாசில்தார் இப்ராகிம் 94436 31261, 79049 16350, சிரஸ்தாரர் ராஜேந்திரன் 80729 08948, 94433 02572, ஆர்.ஐ., சையது ரஹ்மதுல்லா 98421 78697 உதவுவர். இவர்களுடன் கண்காணிப்பு அதிகாரிகளாக மருத்துவ விஷயங்களுக்கு என்.டி.இ.பி., இணை இயக்குனர் சுபைகர்கான், போக்குவரத்திற்கு மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., செல்வம், அடிப்படை தேவைகளுக்கு டி.ஆர்.ஓ., கண்ணன், உணவுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
18-மே-202022:26:29 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி வேலை இருக்கும்போது வடமாநிலத் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கிக் கொழுத்தனர் பல முதலாளிகள். கஷ்டம் வந்தவுடன் அவர்களை அநாதரவாக நடுத்த தெருவில் விட்டுவிட்டனர் அவர்களால் பலனடைந்த முதலாளிகள். இவர்கள் நினைத்திருந்தால் அவர்களுக்கு அந்தந்தக் கம்பெனிகளிலேயே பிரச்சினை தீரும்வரை உணவளித்து காத்திருக்க முடியும். இந்த பண முதலைகளின் சுயநலம் இப்போது இவர்களையே தாக்குகிறது.தமிழன் எவனும் வடமாநிலத் தொழிலாளர்கள் போல கடினமாக உழைக்கவும் மாட்டார்கள். இங்கு கிடைக்கும் சம்பளத்துக்கு வேலையும் செய்ய மாட்டார்கள். அரசாங்கம் நிறைய இலவசங்களைக் கொடுப்பதால் வாங்கி தண்ணியடித்து ஜாலியாகப் பொழுதைக் கழிப்பான் தமிழன்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-மே-202014:13:09 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இதுதான் தக்க சமயம். உள்ளூர் தொழிலாளர்கள் கடினமாக உழைத்து செய்யும் தொழிலில் நல்ல பெயர் எடுத்தால் வருங்காலம் இனிதாகும். மேலும் கொரோன போன்ற காலங்களில் புலம் பெயர் என்ற பேச்சே கிடையாது. முதலாளிகளும் தொழிலார்களை மதித்து திறனுக்கேற்ற ஊதியத்தை அள்ளித்தந்து அவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-மே-202021:44:12 IST Report Abuse
Bhaskaran காசா நிறுவனம் கூட்டி வந்த தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கலைன்னு போரூரில் வடமாநில தொழிலாளர் கலாட்டா பண்ணியது செய்தி வந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X