மிகக்குறைந்த சம்பளம், கடின உழைப்பு என்ற 'தகுதி' அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை மாவட்டத்தில் ஓட்டல், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். ஊரடங்கால் வேலை இழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் செல்ல வழியின்றி பணி செய்த இடத்திலேயே தங்கினர்.ஒரு வாரமாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அரசு ஏற்பாட்டின்படி கிளம்பி செல்வதால் போதிய ஆட்கள் கிடைக்காமல் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கப்பலுார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரகுநாதராஜா கூறியதாவது: தொழிற்சாலைகளில் 20 - 40 சதவீதம் வரை வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். கடினமான வேலைகளை சுலபமாக செய்தனர். ஊரடங்கால் அவர்களுக்கு சம்பளம், சாப்பாடு, மருத்துவ வசதிகளை 45 நாட்களுக்கும் மேலாக தொழிற்சாலை நிர்வாகங்கள் செய்து கொடுத்தன. ஊரடங்கு முடியும் நிலையில் தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதால் தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, என்றார்.
அதிகாரிகள் குழு நியமனம்
வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருப்பவர்களுக்கு உதவ தேசிய நெடுஞ்சாலை டி.ஆர்.ஓ., கண்ணன் 88255 53805, தாசில்தார் பாண்டியன் கீர்த்தி 99763 45460 நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மாநிலங்களுக்கு செல்ல தாசில்தார் இப்ராகிம் 94436 31261, 79049 16350, சிரஸ்தாரர் ராஜேந்திரன் 80729 08948, 94433 02572, ஆர்.ஐ., சையது ரஹ்மதுல்லா 98421 78697 உதவுவர். இவர்களுடன் கண்காணிப்பு அதிகாரிகளாக மருத்துவ விஷயங்களுக்கு என்.டி.இ.பி., இணை இயக்குனர் சுபைகர்கான், போக்குவரத்திற்கு மதுரை வடக்கு ஆர்.டி.ஓ., செல்வம், அடிப்படை தேவைகளுக்கு டி.ஆர்.ஓ., கண்ணன், உணவுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE