பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த வலியுறுத்தல்

Added : மே 13, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'கொரோனா பாதிப்பு குறைந்த பின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும்'என, உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கழக நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் பக்தவச்சலம், பொதுச்செயலாளர் சேது செல்வம், பொருளாளர் ஜெயக்குமார், செய்தி தொடர்பு செயலர் முருகேசன் அறிக்கை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 12 வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பல்கலை கழக தேர்வுகளைக் கூட ஜூலை, ஆகஸ்டில் நடத்தி விட்டு செப்டம்பரில் தான் கல்லுாரிகளை திறக்க பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து கொரோனாவை விரட்டியடிக்கவே அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா நிலைமை சீரான பிறகு பொதுத்தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜிஸ்குமார், செயலாளர் பாலா அறிக்கை:

'ஊரடங்கினால் பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதித்துள்ளனர். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, ஐந்து மாதங்களாகும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும், அவசர அவசரமாக ஜூன் மாதத்தில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் அசாதாரண சூழல் உள்ளது. எனவே, பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X