மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்| Dinamalar

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020
Share
திருப்பூர்;மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு முக கவசம் வழங்கப்படுகிறது.கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில், தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள்
 மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்

திருப்பூர்;மாநகராட்சி அலுவலகத்தில் தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு முக கவசம் வழங்கப்படுகிறது.கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில், தானியங்கி முக கவசம் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலகப் பணிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தும் வகையில், பிரதான நுழைவாயில் அருகே இது அமைக்கப்பட்டுள்ளது.ஒரு ரூபாய் நாணயம் போட்டால் ஒரு முக கவசத்தை தரும் வகையில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.முக கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால், சேவை அடிப்படையில் ஒரு ரூபாய்க்கு தரமான மூன்று லேயர் கொண்ட முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X