இந்தியா

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவருக்கு போலீஸ் வலை

Added : மே 13, 2020
Share
Advertisement

வில்லியனுார்: கழிவுநீர் வாய்க்கால் பிரச்னையில் பக்கத்துவீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் அம்பிகாபதி. ஓய்வு பெற்ற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியரான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அல்லிமுத்து (எ) தமிழ்க்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று காலை அம்பிகாபதி, தன் வீட்டு கழிவு நீரை அல்லிமுத்து வீட்டுபக்கம் தள்ளிவிட்டார். அதனை அல்லிமுத்து தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அம்பிகாபதி, தான் கையில் வைத்திருந்த கத்தியால் அல்லிமுத்துவை சரமாரியாக வெட்டினார்.அதில் படுகாயமடைந்த அல்லிமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X