அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை: டிரம்ப்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் ஒரு கோடியை தாண்டிவிடும் என்று அதிபர் டிரமப் தெரிவித்துள்ளார்.



latest tamil news



வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, ' அமெரிக்காவில் உள்ள 92 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகின்றன.

'மூன்று வாரங்களுக்கு முன் ஒரு நாளைக்கு 1.5 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 3 லட்சமாகி .உள்ளது. எனவே இந்த வார இறுதியில் மொத்த பரிசோதனைகள் ஒரு கோடியை தாண்டிவிடும். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடக்கின்றன' இவ்வாறு அவர் தெரிவித்தார்


latest tamil news



சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 40 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 2.85 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிக பாதிப்பையும், உயிரிழப்பபையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 80,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அங்கு 13 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
13-மே-202012:07:04 IST Report Abuse
S. Narayanan பாதிப்பும் அதே அளவு அதிகமிருக்கும் என்பது உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X