இன்ஜினியரிங், வேளாண்மை துறைகளின் எதிர்காலம்? கல்வியாளர்கள் விளக்கம்| Check out opportunities for engineering, agriculture | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜினியரிங், வேளாண்மை துறைகளின் எதிர்காலம்? கல்வியாளர்கள் விளக்கம்

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
agriculture, engineering, kalvimalar, dinamalar, education

'தினமலர்' நாளிதழ் மற்றும், 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில் இன்று(மே 13), இன்ஜினியரிங், வேளாண்மை துறைகளில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, துறை சார்ந்த கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

நேற்று நடந்த நேரலை நிகழ்ச்சியில், டிஜிட்டல் துறையில் உள்ள ஏராளமான வாய்ப்புகள் குறித்து கிருபா சங்கர், 'கன்டன்ட் கிரியேஷன், கன்டன்ட் மார்க்கெட்டிங், எஸ்.இ.ஓ., இ- மெயில் மார்க்கெட்டிங், மல்ட்டி சேனல் மார்க்கெட்டிங்' உட்பட, பல்வேறு பிரகாசமான வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.மேலும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்து நித்யா மற்றும், 'பயர் அண்டு இண்டஸ்டிரியல் சேப்டி' குறித்து, பிரபு ஆகியோர் விளக்கமளித்தனர்.


latest tamil news
நேரலையில் இன்று...


வேளாண்மை துறை படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், இன்ஜினியரிங் துறையின் எதிர்காலம் குறித்து, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர் அலமேலு. கல்லுாரியை தேர்வு செய்யும் போது, கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், இன்றைய நேரலையில் பங்கேற்கின்றனர்.

வரும், 17ம் தேதி வரை, தினமும் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடைபெறும் இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்கு பெற மற்றும் கல்வியாளர்களிடம் உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ--மெயில் முகவரி அளித்து, உடனே பதிவு செய்யலாம்.

இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X