அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை? மாநகராட்சி திடீர் முடிவு!| Dinamalar

தமிழ்நாடு

அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை? மாநகராட்சி திடீர் முடிவு!

Added : மே 13, 2020 | கருத்துகள் (1)
Share
 அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை?  மாநகராட்சி திடீர் முடிவு!

சென்னை : 'கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, அறிகுறி இருந்தால் மட்டும், பரிசோதனை செய்தால் போதும்' என, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டை மையப்படுத்தி, சென்னை முழுதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வியாபாரிகள் மட்டுமல்லாமல், காய்கறி வாங்கியோருக்கும் தொற்று பாதித்தது.தற்போதைய நிலவரப்படி, சென்னை மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தால், 60 முதல் 70 சதவீதம் பேருக்கு, கொரோனா அறிகுறி இருக்க வாய்ப்புள்ளது. அனைவருக்கும், பரிசோதனை செய்வது சாத்தியமில்லை.

மேலும், கொரோனா பாதித்த நபர்களுடன், நேரடி தொடர்பில் உள்ளவர்கள் அனைவருக்கும் பரிசோதனை தேவையில்லை என, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.தற்போது, காய்கறி வியாபாரி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே, பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில், பலருக்கு பாதிப்பு இல்லையென்றும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை; வீட்டில் தனிமையில் இருந்தாலே போதுமானது என்ற நிலை உள்ளது.இதனால், தொடர்பில் இருந்தவர்களை மட்டுமே தனியாக பிரித்து, பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கணக்கிட்டால், 20 முதல் 30 பேர் வரை, பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. இதில், நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளனஇதனால், தொடர்பில் இருந்தவர்களுக்கு, காய்ச்சல் மற்றும் ஏற்கனவே நோய் பாதிப்பு இருந்தால், பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை.கபசுர குடிநீர், சத்தான உணவுகள், மருத்துவர் ஆலோசனையில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சாப்பிட்டாலே போதும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X