தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளை எங்கு அனுப்புவது? முடிவெடுக்கும் அதிகாரம் சுகாதார துறைக்கு!

Added : மே 13, 2020
Share
Advertisement
 கொரோனா நோயாளிகளை எங்கு அனுப்புவது? முடிவெடுக்கும் அதிகாரம் சுகாதார துறைக்கு!

சென்னை : 'சென்னையில், கொரோனா பாதித்தவர்களின் உடல்நிலையை கேட்டறிந்து, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அனுப்புவதா அல்லது தனிமை முகாமில் சேர்ப்பதா என்பதை, மாநகராட்சியின் சுகாதாரத் துறை முடிவு செய்யலாம்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில், 4,000க்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கோயம்பேடு மார்க்கெட் சார்ந்த பாதிப்புகள் தான், சென்னையில் பரவலாக உள்ளது. பாதிப்பு, 2,000க்குள் இருக்கும்போது, கொரோனா பாதித்த அனைவரையும், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கு சிகிச்சை, ஓய்வு வழங்கி, குணப்படுத்தினர்.

பாதிப்பு, 3,000த்தை கடந்ததும், அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவரின் உடல்நிலையை, மருத்துவர்கள் பரிசோதித்தனர். கொரோனாவின் வீரியம், ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகள், தொடர்ந்து சிகிச்சை மற்றும் தொடர் மருந்து எடுத்து வரும் நபர்கள் மட்டுமே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.மீதமுள்ள நபர்களை, தனிமை முகாம்களுக்கு அனுப்பினர்.

தினசரி பாதிப்பு, 500ஐ தாண்டுவதால், அரசு மருத்துவமனையில், படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்கள், ஆம்புலன்சில், பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் ஏற்படும் பயத்தில், பலருக்கு, வேறு சில உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது.பாதிப்பு, 4,000ஐ தாண்டிய நிலையில், கொரோனா பாதித்த நபரை, வீட்டில் இருந்து எங்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவு, சுகாதார துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையம் மற்றும் பல கல்லுாரிகளில், தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

கொரோனா நபருக்கு, தீராத காய்ச்சல், சர்க்கரை, இதயம், நுரையீரல் போன்ற நோய்கள் இருந்தால், நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். எந்த நோய் அறிகுறியும் இல்லாமல், கொரோனா பாதித்தால், தனிமை முகாமிற்கு அனுப்பப்படுவர். அங்கு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே எடுத்த பின், உடல்நிலையை மருத்துவர் ஆய்வு செய்வர்.

வைரசின் தன்மையை பொறுத்து, வீட்டில் தனிமைப்படுத்துவதா அல்லது தனிமை முகாமில் வைத்திருப்பதா என, மருத்துவ அறிக்கை மற்றும் கொரோனா பாதித்த நபரின் பொருளாதாரம், வீட்டில் உள்ள வசதியை வைத்து முடிவு செய்யப்படும். நோய் அறிகுறி இல்லாமல், பலருக்கு கொரோனா பாதித்துள்ளதால், இந்த நடைமுறை கையாளப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X