பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம்

Added : மே 13, 2020
Share
Advertisement

திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துளிர் அறக்கட்டளையினர், 25 துாய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். கவுரவ ஆலோசகர் சுந்தரபாண்டியன், நிர்வாகிகள் சுகுமார், கார்த்திக், உதவி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.l அவிநாசி அருகே கருவலூர் பகுதியில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நல சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நல அமைப்பின் சார்பில், அரிசி, பருப்பு, மளிகை பொருள் காய்கறி மற்றும், 500 ரூபாய் என, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நல அமைப்பு சார்பில் முருகேசன், பழனிசாமி, தண்டபாணி, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் சார்பில், ராஜேந்திரன், துரைசாமி, வேலுசாமி, சாமியப்பன் பங்கேற்றனர்.l கருவலூர் ஊராட்சி, அண்ணாநகர் ஏ.டி., காலனியை சேர்ந்த, 150 குடும்பத்தினருக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ஆனந்தன், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண் பொருட்களை வழங்கினார். ஒன்றிய ஊராட்சி குழு தலைவர் ஜெகதீசன், தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.l திருமுருகன்பூண்டியில் செயல்படும் விவேகானந்த சேவாலயம் சார்பில், நிவாரண உதவிகள், தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதுவரை, 675 குடும்பத்தினருக்கு தலா ரூ.1,200 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நேற்று வீடு இல்லாத, 50 தொழிலாளர் குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. சேவாலய நிர்வாகி செந்தில்நாதன், அறங்காவலர் முத்துகுமார், ஜோதிலட்சுமி, கோவை வசந்தாமணி, இந்து முன்னணி நிர்வாகி மோகன்தாஸ் பங்கேற்றனர்.l பல்லடம் அருகே வடுகபாளையம் புதுார் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 57. ஓய்வுபெற்ற கால்நடை உதவி மருத்துவரான இவர், தான் வசிக்கும் ஊராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு, நிவாரண பொருட்கள், மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X