சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் -- போலீசார் மோதல்; காவலர் படுகாயம்; த.பேட்டையில் பரபரப்பு

Added : மே 13, 2020
Share
Advertisement

ஆர்.கே.நகர் : தண்டையார்பேட்டையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில், மக்கள், போலீஸ்காரர்கள் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், மூன்றாவது தெருவில், 20க்கும் மேற்பட்டோர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த, மூன்று நாட்களுக்கு முன், அந்த பகுதியைச் சேர்ந்த, பரகத்து நிஷா என்ற பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால், அங்கு, 24 மணி நேரமும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு, வெளியில் வர முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அந்த பகுதியில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே, பயங்கர மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் ஜீப் டிரைவர் மகேஷ், 31, என்பவர் படுகாயமடைந்தார்.ஆர்.கே.நகர், போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த சையது, 51, அவரின் மகன் நிஜாமுதீன், 21, மற்றும் ஷேக், 45, என்பவர் உட்பட, 35 பேர் மீது வழக்கு செய்து உள்ளனர்.

இந்த மோதல் குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:நேதாஜி நகர், மூன்றாவது தெருவில், அதிகம் பேர், கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.இதனால், அங்கு கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், ரமலான் நோன்பு கஞ்சி வினியோகம் செய்ய, சமூக இடைவெளி இல்லாமல் அவர்கள் கூட்டம் கூடுகின்றனர். இதை கேட்ட போலீசாரிடம், மோதலில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.மக்கள், போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால், ஆர்.கே.நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X